விஷயம் இருந்தது, ஆனால் அது நாதனைப் பற்றியது. நாதன், அவன் பெயர் தெரியாத மாணவரோ ஆசிரியரோ எங்கள் பள்ளியில் இருக்க முடியாது. மாநிறம், கழுத்து வரை பின் முடி நீண்டிருக்கும், முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். ஊரில் ரௌடி மாதிரி திரிந்து கொண்டிருக்கும் கல்லூரி படிக்கும் அண்ணங்களுடன் தான் எப்போதும் இருப்பான். அவனை கண்டாலே எங்களுக்கு பயமாகதான் இருக்கும். ” டேய் சுப்ரமணி மவனே, இங்க வா!” என்று எல்லாரையும் அவர்கள் அப்பா பேர் சொல்லி கூப்பிடுவான். மதிக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தை அர்ச்சனை தான். தவறாமல் தினமும் பள்ளிக்கு வருவான், அவன் பொழுதுபோக்கே இங்க தான்.
About passara.sdgyc
Hi, My Name is Hafeez. I am a webdesigner, blogspot developer and UI designer. I am a certified Themeforest top contributor and popular at JavaScript engineers. We have a team of professinal programmers, developers work together and make unique blogger templates.

0 comments:
Post a Comment